முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. தரவரிசை: 10-வது இடத்தில் விராட் கோலி - கே.எல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் 10-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், கேஎல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதற்கு முன் 9-வது இடத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மோர்கன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 10-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கேஎல் ராகுல் 823 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், கொலின் முன்றோ 4-வது இடத்திலும், மேக்ஸ்வெல் 5-வது இடத்திலும், தாவித் மலன் 6-வது இடத்திலும், எவின் லீவிஸ் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா 8-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சு தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் எந்தவொரு இந்திய பந்து வீச்சாளர்களும் இல்லை. முதல் 10 இடங்களில் 9-வது இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து