முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

248 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் அழைத்து வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 248 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மருத்துவக் கண்காணிப்பில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஹூபே மாகாணம், வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.இந்த கோவிட்-19 வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி, அங்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில், சீனாவில் ஹூபே மாநிலத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டதில் கோவிட்-19 வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். 

இதற்காக டெல்லி அருகே மனேசரில் ராணுவத்துக்குச் சொந்தமான முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்களில் யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து