முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சுத்தமான பி.எஸ்-6 ரக பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

ஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது

உலகில் எந்த நாடும் மிகக்குறைவாக 3 ஆண்டுகளுக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவந்தது இல்லை. ஆனால், இந்தியா மட்டுமே குறுகிய காலத்தில் அதாவது யூரோ-4 எரிபொருள் கொண்டு வந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் யூரோ-5 எரிபொருட்களுக்குச் செல்லாமல் நேரடியாக யூரோ-6 எரிபொருளுக்கு மாறுகிறது. உலகில் சில நாடுகள் மட்டுமே இதுபோன்ற அதி சுத்தமான பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் வைத்துள்ளன. எரிபொருட்களில் சல்பரின்(கந்தகம்) அளவை குறைத்து வெளியிடுதலே மிக சுத்தமான பெட்ரோல்,டீசல் கொண்டுவருவதன் நோக்கமாகும். இதன் மூலம் காற்று மாசு பெருமளவு குறையும்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,

பிஎஸ்-6 வாகனங்களுக்கு ஏற்றார்போல் சல்பர் குறைவாக இருக்கும் பெட்ரோல், டீசலை உற்பத்தி செய்யும் பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கி விட்டன. சுத்திகரிக்கப்படும் ஒவ்வொரு துளி எரிபொருளிலும் சல்பரின் அளவைக் கண்காணிக்க நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பிஎஸ்-6 பெட்ரோல், டீசலை நாடுமுழுவதும் விநியோகம் செய்வதற்கான பணியைத் தொடங்கி விடுவோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பிஎஸ்-6 ரக பெட்ரோல், டீசல் அனைத்து முகவர்களிடம் கிடைக்கத் தொடங்கி விடும். கடந்த 6 ஆண்டுகள் நீண்ட பயணத்தில் பிஎஸ்-4 ரக பெட்ரோல், டீசலில் இருந்து பிஎஸ்-5 ரகத்துக்குச் செல்லாமல் நேரடியாக பிஎஸ்-6 ரக எரிபொருட்களுக்கு மாறுகிறோம்.இதை கடந்த 3 ஆண்டுகளில் எட்டியுள்ளோம். எந்த விதமான இடையூறும் இன்றி பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் நாடுமுழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கிடைக்கும். உலகில் மிகவும் தரமான பெட்ரோல், டீசலை நம் நாடு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கும். உலகின் எந்தநாட்டிலும் இதுபோன்ற தரமான பெட்ரோல், டீசலை பெற முடியாது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் மட்டுமே இத்தகைய தரமான எரிபொருட்களைப் பெற முடியும் இவ்வாறு ஐ.ஓ.சி. தலைவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து