முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவிமும்பையில் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து பைனல்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் ஜூனியர் 7-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படுகிறது.

16 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழா நவம்பர் 2-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், நவி மும்பை, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நவம்பர் 21-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு மும்பை புறநகரான நவிமும்பை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கால்இறுதி ஆட்டங்களும், 17-ம் தேதி அரைஇறுதி ஆட்டங்களும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து