முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக மாணவர்களின் துன்புறுத்தலை சகிக்காமல் தேம்பி அழும் மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ஒன்றை முகநூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் என்ற அந்தப் பெண் கடந்த புதன்கிழமை தனது 9 வயது மகன் குவாடனை பள்ளியில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். முகநூல் வீடியோவில் குள்ளமாக தோற்றமளிக்கும் அச்சிறுவன் தனது பள்ளிச் சீருடையில் கார் இருக்கையில் சாய்ந்து கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்று விட வேண்டும் என விரும்புகிறேன் என தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுகிறான். அச்சிறுவன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தை கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பள்ளியில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டான். ஒரு தாயாக எனது பொறுப் பிலிருந்து நான் தவறி விட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதுகிறேன் என்கிறார். மேலும் சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பிற பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. ஒரு கோடியே 50 லட்சம் முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து