ஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      விளையாட்டு
Kohli-Rahul 2020 02 25

டாக்கா : வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ள ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்பட ஆறு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

வங்காள தேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி - 20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு போட்டிக்கான ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணியை நேற்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

ஆசிய லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-1. கேஎல் ராகுல், 2. ஷிகர் தவான், 3. தமிம் இக்பால், 4. விராட் கோலி, 5. லிட்டோன் தாஸ், 6. ரிஷப் பண்ட், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. திசாரா பெரேரா, 9. ரஷித் கான், 10. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 11. சந்தீப் லாமிச்சேன், 12. லசித் மலிங்கா, 13. முகமது ஷமி, 14. குல்தீப் யாதவ், 15. முஜீப் உர் ரஹ்மான்.

உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. கிறிஸ் கெய்ல், 3. டு பிளிசிஸ், 4. நிக்கோலஸ் பூரன், 5. ராஸ் டெய்லர், 6. பேர்ஸ்டோவ், 7. பொல்லார்டு. 8. அடில் ரஷித், 9. ஷெல்டன் காட்ரெல், 10. லுங்கி நிகிடி, 11. அண்ட்ரூ டை, 12. மெக்கிளேனகன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து