முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் துணை அதிபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவுக்கு அடுத்து, கோவிட் - 19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சலுக்கு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடாக ஈரான் அறியப்படுகிறது. ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானில் கரோனா வைரஸ் குறித்த அதீத அச்சுறுத்தலை அமெரிக்கா ஏற்படுத்துவதாக அந்நாட்டுதிபர் ஹசன் ரவ்ஹானி குற்றம் சாட்டியுள்ளார். உலக அளவில் கரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 81,200-க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து