முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,4071-க்கும், சவரன் ரூ. 32,568-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 49.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை இந்தாண்டு தொடக்க முதலே அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் விலை ஏற்றம் என்ற அளவில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலைமை பிப்ரவரி மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் தினந்தோறும் தங்கம் விலை அதிகரித்து புதிய சாதனையை படைத்து வந்தது. கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ. 94 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 4166-க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ. 752 அதிகரித்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 328-க்கு விற்றது. தொடர்ச்சியாக கடந்த 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 9 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,112 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஒரு சவரன் ரூ. 25,600-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் (24-ம் தேதி வரை) மட்டும் சவரன் ரூ.7728 அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து