முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காமராசர் பல்கலைக் கழக திருமங்கலம் உறுப்பு கல்லூரியின் 8வது ஆண்டுவிழா, விளையாட்டு விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை காமராசர் பல்கலைக் கழக திருமங்கலம் உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8வது ஆண்டு விழா,விளையாட்டு விழாவை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் மதுரை காமராசர் பல்கலைக் கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இங்கு 1700மாணவ,மாணவியர் சிறப்புடன் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த கல்லூரியில் 8வது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர்(பொ) டாக்டர்.எம்.புவனேஸ்வரன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.மதுரை காமராசர் பல்கலைக்கழக டீன் டாக்டர்.நல்லகாமன் முன்னிலை வகித்தார்.பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர்.தீனதயாளன், டாக்டர்.ஷகிலா ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள்.ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பங்கேற்ற இந்த விழாவில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் கல்லூரியின் 8வது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழாவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கல்வி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெற்றி கோப்பைகளையும்,பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இந்த விழாவில் மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி, முன்னாள் யூனியன் துணைச் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் யூனியன்சேர்மன் லதாஜெகன்,துணை சேர்மன் வளர்மதி அன்பழகன்,டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் சண்முகப்பிரியா பாவடியான்,முன்னாள் துணை சேர்மன் பாவடியான்,கண்ணன்,கட்சி நிர்வாகிகள்அன்னக்கொடி,சுகுமார்,கொடிவைரன்,ஆண்டிச்சாமி,சாமிநாதன்,சிவன்காளை,சிவபிரியா,செல்வம்,சிங்கராஜபாண்டியன்,ஜெயசி.செல்வகுமரன்,விவேக்,குருகுலமாணவன் அழகர்சாமி,வேல்ராமகிருஷ்ணன்,கரிகாலன்  மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவில்கல்லூரி மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிறப்பான முறையில் பிரியாணி விருந்து மதிய உணவக வழங்கப்பட்டது.நிறைவாக கல்லூரி தமிழ் பேராசிரியர் கரு.முருகேசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து