முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடை வடிவமைப்பு துறையில் வேலைவாய்ப்பு அதிகம் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக குயஉழn குநளவ 2020 என்ற ஆடை வடிவமைப்பியல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆபரணம் வடிவமைத்தல், மெஹந்தி, முழு ஓவியம் வரைதல், பயனற்ற பொருளில் இருந்து பொருள்கள் செய்தல், நக ஓவியம், ஆடை வடிவமைத்தல் போன்ற பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் ஆடை வடிவமைப்பாளர் நிகழ்ச்சியில் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை உடுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், தஞ்சாவூர் மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்களும் ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றனர். இங்விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பாரத் கல்லூரி தஞ்சாவூர் மாணவர்கள் பெற்றனர். இதில் துறை இயக்குநர் பூ.தர்மலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் நா.ராஜேந்திரன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் நமது ஆடைகள் தேர்வு செய்யும் முறை காலச் சூழ்நிலை பொறுத்து மாறுபடும் என்றும் கோடை காலங்களில் பருத்தி உடை மிகவும் சிறந்தது என்றும் கூறினார். உலகிலேயே ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி துறையில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் 7சதவிகித பங்கை அளிக்கிறது. இத்துறையானது 4% GDP, 14%  தொழில் உற்பத்தியிலும் 27% அந்நிய செலாவணி தனது பங்கை அளிக்கிறது. இத்துறை நேரடியாக 45 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது மற்றும் விவசாய துறைக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறை இதுவாகும். இந்தியா ஆடை மற்றும் ஜவுளி துறையில் பழங்காலத்தில் இருந்தே சிறப்பு பெயரை பெற்றது என்றும் நமது நாட்டில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு அதிகப்படியான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முந்தைய காலத்தில் தென் இந்தியாவில் இருந்து உருவாகும் ஆடைகளை ரோமானியர்கள் விரும்பி உடுத்தினார்கள் என்றும் கூறினார்.
   யுவராஜ், தலைமை ஆடை வடிவமைப்பாளர், புமு குழுமம், கோயம்புத்தூர் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆடை வடிவமைப்பு துறையின் முக்கியத்துவத்தையும் அதில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் விளக்கினார். மாணவர்கள் தற்போதைய நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான ஆடைகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளையும் அவர்களுடைய தனித்துவ திறமைகளையும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆட்சி குழு உறுப்பினர். பேராசிரியர்  .குருமூர்த்தி   வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா திறன் மேம்பாட்டு மைய உதவி பேராசிரியர் முனைவர் க.மகேஷ் நன்றியுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து