முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பீதி எதிரொலி : இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 16 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக ஜப்பான் செல்ல இருந்த இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கி விட்டதால், கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து வகை விளையாட்டுகளும் உலகம் முழுவதும் கொரோனாவினால் சீர்குலைந்து போய் கிடக்கிறது.அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் கிடையாது. விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து, தள்ளிவைப்பு தொடர் கதையாகிறது. இதனால் விளையாட்டு ரசிகர்கள் தங்களது பொழுது போக்கு இனி என்ன? என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஏற்பாடு மற்றும் அங்கு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு முறைகள், பாதுகாப்பு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னணி நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 25-ந்தேதி டோக்கியோ செல்ல இருந்தனர்.தற்போது இந்த பயணம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மாற்று தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து