முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் அடிக்கடி விபத்து: அச்சத்தின் உச்சத்தில் ஊழியர்கள்:

செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அங்கு பணியாற்றிடும் ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பணியாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் நான்குவழிச்சாலை டோல்கேட் அமைந்துள்ளது.இந்த டோல்கேட் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இருப்பினும் கப்பலூர் டோல்கேட் பாதுகாப்பான இடத்தில் அமையவில்லை என்பது அங்கு அடிக்கடி விபத்துகள் மூலமாக தெரிகிறது.குறிப்பாக மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் கப்பலூர் ரிங்ரோடு பாலத்தின் கீழே இறக்கத்தில் இந்த டோல்கேட் அமைந்திருப்பதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் டோல்கேட் கூண்டுகள் மீது அடிக்கடி மோதி விபத்துக்கு உள்ளாகின்றன.இதனால் கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ள பகுதி விபத்துக்களின் விளைநிலமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை திருமங்கலம் பகுதியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு லாரிn திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் தற்காலிக கூடாரத்தின்  மீது  பயங்கரமாக மோதியதுடன் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. அப்போது பணியிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தற்செயலாக தறிகெட்டு வந்த லாரியை கவனித்து விட்டதால் கூண்டை விட்டு வெளிNறி ஓடி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.இருப்பினும் டோல்கேட்டிலிருந்த தற்காலிக கூடாரம் மற்றும் பாதுகாப்பு சுவர் முற்றிலும் சேதமடைந்தது.இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதால் பாதுகாப்பற்ற இடத்தில் அமைந்திருக்கும் கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் போதிய பாதுகாப்புடன் நிம்மதியாக பணியாற்றிட இயலும் என்று டோல்கேட் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து