முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வருகை தரும் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் விஷ கிருமி அழி்ப்பு மருந்து தெளிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2020      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்- ராமேசுவரம் பகுதியில்  கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கு ராமேசுவரம் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தரும் வாகனங்களுக்கு நகராட்சி எல்லை பகுதியில் வைத்து விஷ கிருமிகள் அழிக்கு மருந்தைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று தெளித்து பின்னர் பக்தர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.
 ராமேசுவரம்  ராமநாதசுமி திருக்கோவிலுக்கு தினசரி வெளி மாநிலம்,வெளிநாட்டை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.இவர்கள் ராமேசுவரம் பகுதியிலுள்ள தங்கும் விடுதிகளில் தங்கி பின்னர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.இந்த நிலையில் உலகம் முழுவதும் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலாக தாக்கி வருகிறது.இந்த வைரஸை தடுக்க தமிழகத்தில் மத்திய அரசு உள்பட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் ஆலோசணைப்படி மாவட்ட முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும்,அது குறித்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக  ராமேசுவரத்திற்கு வருகை தரும் பக்தர்கள்  மூலம்  ராமேசுவரம் பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி ஆணையர் இராமர் மற்றும் சுகாதார ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர்கள் திருக்கோவிலை சுற்றி மருந்துகள் தெளிப்பது,சுகாதாரத்தை மேம்படுத்து உள்பட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன தொடர்ந்து திருக்கோவிலுக்கு  பக்தர்கள் வருகை தரும் வாகனங்களை ராமேசுவரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  வாகன சுங்க சாவடியில் நிறுத்தி வாகனங்கள் உள் பகுதி மற்றும் வெளியில் விஷ கிருமிகள் அழிக்கு   மருந்துகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று தெளித்தனர்.பின்னர் வாகனங்களில் இருந்த பக்தர்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து