முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது என்றும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும்  ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை  அடைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ்,

கொரோனாவால் ஏற்பட்டுள்ள  பொருளாதார பாதிப்பில் கவனித்து வருகிறோம்.ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும். அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதனால் வீட்டுக்கடன் வட்டி குறைய  வாய்ப்புள்ளது.மேலும், வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் இ.எம்.ஐ.  கட்ட தேவையில்லை. இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது என பல்வேறு சலுகைகளை  அறிவித்தார். இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் பணப்புழக்கத்தை மேம்படுத்தும்,  நிதி செலவு குறைக்கும் இதனால், மத்திய தர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது என்றும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து