முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தாக்குதல்: உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதல் காரணமாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 25 ஆயிரத்து 226 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 555 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து