முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுப் பரிசாக வழங்கப்பட்ட இந்திய யானை கருணைக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்காவுக்கு இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டிருந்த அம்பிகா வாஷிங்டன் எனும் யானை, வன உயிரினக் காப்பகத்தில் நேற்று முன்தினம் கருணைக் கொலை செய்யப்பட்டது. அந்த யானைக்கு 72 வயதாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1948-ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானை கடந்த 1961-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் இருந்த யானை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டது. நிற்க முடியாமல் சிரமப்பட்டது. இதனால் அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் குழு கருணைக் கொலை செய்தது. வட அமெரிக்காவில் வயதான 3-வது ஆசிய யானையாக அம்பிகா இருந்து வந்தது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில்,

இந்தியாவின் அன்புப் பரிசான அம்பிகா யானை, அமெரிக்காவிலேயே வயதான ஆசிய யானையாக இருந்து வந்தது. உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அம்பிகா யானை ஸ்மித்சோனியன் தேசியப் பூங்காவில் கருணைக் கொலை செய்யப்பட்டது. இந்த தேசியப் பூங்காவிற்கு வந்த பின் லட்சக்கணக்கான மக்களை மகிழ்வித்துள்ளது. அனைவராலும் அம்பிகா யானை விரும்பப்பட்டது. இப்போது அதனை இழந்து வாடுகிறோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து