முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று மூத்த அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் அவரது தலைமையில் மூத்த அமைச்சர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்தின்றி தவித்து வரும் பிரச்சினை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து