முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த இடைவெளி ரவிசாஸ்திரி வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள இடைவெளியை வரவேற்கிறேன் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடினார்கள். அதன்பின் அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர். கடந்த 12-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருந்தனர். மழையால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன்பின் கொரோனாவால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இனி்மேல் கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நீண்ட ஓய்வு இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,இந்த ஓய்வு மோசமானது என நினைக்க முடியாது. ஏனென்றால் நியூசிலாந்து தொடருக்குப்பின் வீரர்கள் உடற்தகுதி, காயம், மனநிலை தொடர்பான பிரச்சினைகளில் வீரர்கள் சிக்கி இருந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். கடந்த 10 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 23 - ந்தேதி உலக கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றோம். அதன்பின் தற்போது வரை 10 முதல் 11 நாட்களே வீட்டில் இருந்திருப்போம். சில வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடியிருப்பார்கள். இதனால் அவர்களின் சுமையை நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய சூழ்நிலை கடினம் என்றாலும், வீரர்களுக்காக இது வரவேற்கக்கூடிய ஓய்வு என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து