முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016 - ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 - ம் தேதி முதல் ஆகஸ்டு 9 - ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் இதில் நேரடியாக பங்கேற்கலாம். இதுவரை 57 சதவீதம் பேர் தகுதி பெற்று இருந்தனர். 

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அமைப்புக்குழு தலைவர் யோஷிரோ மோரி, டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்க் ஆகியோர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வெப்பம் குறைவாக உள்ள நேரத்தில்தான் மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளை நடத்த முடியும் என்று கவர்னர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 5 - ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து