முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்தத் தடை : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஊழல் தடுப்பு விதிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிக்கும் வகையில் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தத் தடை விதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. 

கிரிக்கெட் வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் மீதும் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் ஊழல் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்தி சூதாட்ட தரகர்கள் வீரர்களை தொடர்பு கொள்ளாத வண்ணம் கண்காணித்து வருகிறார்கள். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்வாட்ச்கள் மூலம் தகவல்களை எளிதாக பரிமாற்றிக் கொள்ள முடியும். இதன்மூலம் தரகர்கள் வீரர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நினைக்கிறது. இதனால் போட்டியின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்த தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. வீரர்களின் டிரெஸ்சிங் அறை, பால்கனிகள், தங்குமிடத்தில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து