முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 31-ல் அமெரிக்க ஓபன் திட்டமிட்டபடி தொடங்கும் : டென்னிஸ் அசோசியேசன் நம்பிக்கை

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனாவால் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபன் குறிப்பிட்ட தேதியில் நடக்கும் என அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த நாடுகளில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 500-க்கு மேற்பட்டோர் பலியாகினர். இது அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் குறைந்து விடும் என்று நினைத்திருந்த விளையாட்டு அமைப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சிசை அளித்தது.

இதனால் உடனடியாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் ஒட்டு மொத்த கால்பந்து தொடர்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை உலுக்கி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5112 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக நியூயார்க்கில் நகரில் மட்டும் 50 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் எப்போது அடங்கும் என்று தெரியவில்லை. 

இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க இருக்கும் அமெரிக்க ஓபன் இதுவரை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளோடு சென்று கொண்டிருக்கிறது என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்கா டென்னிஸ் அசோசியேசன் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

இந்த நேரம் வரை அட்டவணைப்படி போட்டியை நடத்துவதற்கான எண்ணத்தோடுதான் அமெரிக்கா டென்னிஸ் அசோசியேசன் இருந்து வருகிறது. போட்டியை நடத்துவதற்கான திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிரடியாக மாறிவரும் சூழ்நிலையை கண்காணித்து வருகிறோம். எதிர்பாரத வகையில் நடக்கும் நிகழ்வுகளை சமாளிக்க தயாராகிக் கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து