முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுத்தாலும் - மீறினாலும் 2 ஆண்டு சிறை: கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு அதிரடி

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுப்பவர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் நடமாடுவது என்பது தொடர்கதையாகவே உள்ளது. பொதுமக்கள் இவ்வாறு வெளியே நடமாடினால் கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறிவிடும் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் வெளியே வருவதை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுத்தாலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பி விட்டு சாலையில் நடமாடினால் அதற்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து