முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை 2-வது கட்ட சோதனை முடிவில் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு பின் நாட்களில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டிரம்புக்கு கொரோனா பரிசோதனை, கடந்த சில வாரங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவுகள் கொரோனோ நெகட்டிவ் என்றே வந்திருந்தன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி கூறினார். 15 நிமிடங்களில் சோதனை முடிவுகள் வெளியாகியது. இதில் டிரம்ப் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து