முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79-ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் குணடைந்து வீடு திரும்பி விட்டனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 3374 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 267 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தப்லிகி ஜமாஅத் மாநாடு காரணமாக இந்தியாவில் கோரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாக உள்ளது. தற்போது 4.1 நாட்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. மாநாடு காரணமாக பாதிப்பு இல்லை என்றால் 7.4 நாட்களாக இருந்திருக்கும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 23,924 அரசாங்கங்கள் மற்றும் 3,737 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். அந்த முகாம்களில் 12.5 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அதேபோல் 19,460 உணவு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9,951 அரசு மற்றும் 9,509 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகும். 75 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகள் மற்றும் தொழில்துறை தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. தடை உத்தரவின் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலைமை போதுமானதாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து