முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாவீரர் பிறந்த தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடும் சமண சமய பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர், மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து,  வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியினை பின்பற்றி வாழ்ந்தார்.

இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில், அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து