முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுடன் மோடி ஆலோசனை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடாவுடன் கொரோனா தடுப்பு குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்துள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கரில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத்தை தனது பணிக்காக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஊரடங்கு அறிவித்த பின், பிரதமர் மோடி வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா படேல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், பிரகாஷ் சிங் பாதல், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.  அவர்களின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து