முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் ஊரடங்கு அமலில் இருந்தபோது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ஒருவர் சுட்டுக்கொலை செய்து உள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். யெலட்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சத்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள், ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து