முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு ஹர்பஜன்சிங் உதவி

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்க இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் முடிவு செய்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாப்பை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உணவு வழங்குகிறார்.

ஜலந்தர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்திற்கு உணவு வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் உணவு வழங்குவார்.39 வயதான ஹர்பஜன் சிங் இது தொடர்பாக கூறும்போது எனது உணவு வழங்கும் பணி தொடரும். வீடு இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் ஆகியோருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து