முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 69 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 7 பேர் உயிரிழப்பு சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621-லிருந்து 690-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யயப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது;

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 பெண் உயிரிழந்தார். இன்று(நேற்று) பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 33 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5,305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக சென்னையில் 149 பேரும், கோவையில் 60 பேரும், திண்டுக்கல்லில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும், நாமக்கல்லில் 28 பேரும், ராணிப்பேட்டையில் 27 பேரும், தேனியில் 23 பேரும், கரூரில் 23 பேரும், செங்கல்பட்டில் 24 பேரும்,  மதுரையில் 24 பேரும், திருச்சியில் 30 பேரும், விழுப்புரத்தில் 16 பேரும், திருவாரூரில் 12 பேரும், சேலத்தில் 12 பேரும், திருவள்ளூரில் 12 பேரும், விருதுநகரில் 12 பேரும், தூத்துக்குடியில் 17 பேரும், நாகப்பட்டினத்தில் 11 பேரும், திருப்பத்தூரில் 10 பேரும், கடலூரில் 13 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், கன்னியாகுமரியில் 06 பேரும், சிவகங்கையில் 05 பேரும், வேலூரில் 5 பேரும், தஞ்சாவூரில் 12 பேரும், காஞ்சிபுரத்தில் 6 பேரும், நீலகிரியில் 4 பேரும், திருப்பூரில் 20 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், கள்ளக்குறிச்சியில் 2 பேரும், பெரம்பலூரில் ஒருவரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து