முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு பரிசாக அளித்தது இந்தியா

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், இலங்கைக்கு 10 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை இந்தியா பரிசாக அளித்தது.

இலங்கையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும், இம்மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில், உயிர் காக்கும் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது. அதை ஏற்று, இலங்கைக்கு இந்தியா 10 டன் எடையுள்ள உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளை பரிசாக அளித்துள்ளது.இந்த மருந்துகளை ஏற்றிக்கொண்டு, ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று முன்தினம் கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்கியது.இது குறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை, இந்தியாவின் மதிப்புமிக்க கூட்டாளி. சிக்கலான நேரத்தில் இலங்கைக்கு துணை நிற்கும் இந்தியாவின் மற்றொரு செயல்பாடு இதுவாகும். உள்நாட்டிலேயே இந்தியா சவால்களை சந்தித்து வரும் நிலையில், தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இலங்கைக்குள் நுழைய எல்லா வெளிநாட்டினருக்கும் நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து