முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை பவுன் ரூ. 36,160-க்கு விற்பனை

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2020      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை நேற்று பவுன் 36,160 ரூபாய்க்கு விற்பனையானது

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4520-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.36160க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37824 ரூபாய்க்கு விற்பனையானது. அதேசமயம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 41.70 ரூபாய்க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து