முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் : இந்திய கேப்டன் விராட் கோலி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 5 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளனர். 

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு படையினர் 5 பேர் பலியானார்கள். பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பிர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விராட் கோலி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, எந்தவொரு சூழ்நிலையிலும் கடமையை மறக்காதவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் தியாகத்தை மறக்கக்கூடாது. ஹந்த்வாரா சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கவுதம் கம்பிர் டுவிட்டரில் பதிவில் கூறுகையில், உண்மையான ஹீரோ யார்? நடிகரோ, விளையாட்டு வீரரோ, அரசியல்வாதியோ கிடையாது. எப்பொழுதும் ஒரு உண்மையான ஹீரோ ராணுவ வீரர்தான். அவர்களின் பெற்றோர்களுக்கு சல்யூட். இந்த பூமியில் உலவும் துணிச்சலான ஆன்மாக்கள் என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து