முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் டோனியுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன் : சானியா மிர்சா

புதன்கிழமை, 6 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : நான் டோனியுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:- 

கேள்வி: எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசை? 

பதில்: டோனியை தேர்வு செய்கிறேன். டோனியிடம் சில தடவை ஹலோ சொல்லி இருக்கிறேன். ஆனால் நாங்கள் நண்பர்களாக இல்லை. அவருடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன். நான் டோனியின் மிகப்பெரிய ரசிகை. 

கேள்வி: உங்களது சாதனை பட்டியலில் விடுபட்டது? 

பதில்: ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். 

கேள்வி: உங்களது வாழ்க்கையில் கடினமான தருணம்? 

பதில்: 2016 - ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் அரைஇறுதியில் தோற்றது. அதன் பிறகு நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. 

கேள்வி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய டென்னிஸ் வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் வீராங்கனைகளை அந்த அளவுக்கு பார்க்க முடியவில்லை. அதற்கு காரணம்? 

பதில்: இளம் வயதில் பெண்களை விட ஆண்கள் உயர்மட்ட பயிற்சியை பெறுவது தான் காரணம். 

கேள்வி: உங்களுக்கு பிடித்தமான டென்னிஸ் வீராங்கனை? 

பதில்: ஸ்டெபி கிராப் (ஜெர்மனி). 

கேள்வி: நீங்கள் டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுக்காமல் இருந்திருந்தால்?

பதில்: உள் அலங்கார வடிவமைப்பாளராகி இருப்பேன். இவ்வாறு சானியா மிர்சா பதிலளித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து