முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் இன்று பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் ஆரம்பம் : டி.வி.-யில் நேரடி ஒளிபரப்பு

வெள்ளிக்கிழமை, 15 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெர்லின் : கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனில் இன்று பண்டேஸ்லிகா கால்பந்து விளையாட்டு தொடங்க இருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்தை கொரோனா வைரஸ் சின்னபின்னமாக்கிய போதிலும் ஜெர்மனி நாடு தழுவிய ஊரடங்கு இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கால்பந்து போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அந்நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான பண்டேஸ்லிகா, அணி வீரர்களை தயார்படுத்தியது.

கடந்த சில நாட்களாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒரே நாளில் ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் இந்திய நேரப்படி இரவு ஏழு மணிக்கு தொடங்குகின்றன. அனைத்து போட்டிகளும் டி.வி. மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும், ஐந்து மாற்று வீரர்களை பயன்படுத்தி கொள்ளலாம்,

வீரர்கள் மிகப்பெரிய அளவில் உடல் அளவில் தாக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடக்கின்றன. 7 மணிக்கு டார்ட்மண்ட் - ஸ்கால்க், போர்ட்சுனா - படேர்போர்ன், ஆக்ஸ்பர்க் - வோல்ஸ்பர்க், ஹோப்பென்ஹெய்ம் - ஹெர்தா, ஆர்.பி. லெப்ஜிக் - எஸ.சி. பிரெய்பர் அணிகள் மோதுகின்றன. 10 மணிக்கு எய்ன்ட்ரச்ட் பிராங்பர்ட் - மோன்செங்லாபேச் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து