முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டூத் பேஸ்ட் வாங்க போனதால் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டேன் : ஆக்ஸ்பர்க் கிளப் பயிற்சியாளர் ஹெய்கோ ஹெர்லீஷ் வருத்தம்

சனிக்கிழமை, 16 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : விதியை மீறி டூத் பேஸ்ட் வாங்க வெளியே போனதால் மீண்டும்  14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டார் ஆக்ஸ்பர்க் கிளப் பயிற்சியாளர் ஹெய்கோ ஹெர்லீஷ்.  

கொரோனா தொற்று  பீதிகளுக்கு இடையே  ஜெர்மனியில்  பன்டெஸ்லிகா  லீக் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. அந்த தொடரில் விளையாட உள்ள கிளப்களின் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு  மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டி, பயிற்சி தொடங்க  வசதியாக அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு  உள்ளனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட  ஆக்ஸ்பர்க்  கிளப் பயிற்சியாளர்  ஹெய்கோ ஹெர்லீஷ் (48) கடந்த வியாழக்கிழமையன்று விதியை மீறி வெளியே சென்றுள்ளார். ஓட்டலை விட்டு வெளியில் சென்ற அவர்   டூத் பேஸ்ட்  வாங்க சூப்பர் மார்க்கெட்  சென்றதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து  ஹெய்கோவை மேலும் 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தியுள்ளனர். இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்து, கொரோனா நெகடிவ் என வந்தால் மட்டுமே அனுமதிக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்  ஆக்ஸ்பர்க் அணி  போட்டியில் பயிற்சியாளர் இல்லாமல் உதவி பயிற்சியாளர்கள் உதவியுடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சியாளர் ஹெய்கோ, ‘தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பற்பசை வாங்க  ஓட்டலை விட்டு வெளியே சென்றது தவறு . எனது அணிக்கும், சமூகத்துக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நான் வெளியில் சென்றிருக்க கூடாது என்று வருத்தப்பட்டுள்ளார். அவர் பற்பசையுடன், தோல் பராமரிப்பு பசையும் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை கால்பந்து ரசிகர்கள் கிண்டலாகவும், சீரியசாகவும் விமர்சித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து