முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் இன்று முதல் 3,500 அரசு பஸ்கள் இயக்கம்

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரூ : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முதல் 3,500 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு கடந்த 17- ந் தேதி முடிவடைந்தது. அதன்பின் மாநிலங்களுக்குள் பொது போக்குவரத்தை தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொது போக்குவரத்தை தொடங்கியது.

பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்கனவே பொது பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 3500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூரூ மாநகர போக்குவரத்து கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 30 பயணிகள் வரை பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து