முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

158 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு புனரமைப்பு பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

158 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு புனரமைப்பு பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், பொதுப்பணித் துறை சார்பில் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 17 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும்,  மக்களின் குடிநீர் தேவைகளைப்  பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக  பல்வேறு பாசன மேம்பாட்டுத்  திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில்  சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 230 கோடி  ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம், நொய்யல் ஆறு சீரமைவதுடன் 18 அணைக்கட்டுகள், 22 முறைசார்ந்த குளங்கள், சிதிலமடைந்த அணைக்கட்டு பகுதிகள், வாய்க்கால்கள், மணல் போக்கியின் மதகுகள், விவசாய நிலங்களுக்கு பிரிந்து செல்லும் வழங்கு வாய்க்காலின் மதகுகளை செப்பனிடுதல், நீர்வரத்து ஓடைகளை புதுப்பித்தல், ஓடைகளில் உரிய தடுப்பணைகளை ஏற்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தெள்ளூர் கிராமத்தின் அருகே செய்யாற்றின் குறுக்கே 5 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சின்னாரம்பட்டி கிராமத்தின் அருகே பாம்பாறு ஆற்றின் குறுக்கே 2 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கருங்காலி கிராமத்தின் அருகே அகரம் ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேரிபட்டி கிராமம், மம்மானியூர் குக்கிராமம் அருகில் கன்னிமார் ஓடையின் குறுக்கே ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆமந்தகடவு கிராமத்தில் புல எண். 135-இல் உப்பாறு ஓடையின் குறுக்கே ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை என மொத்தம் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கண்டியூர் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே தொலைகல் 102.17 கி.மீ-இல் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான செல்லூர் அணைகட்டை புனரமைத்தல், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அமராவதி கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே தொலைகல் 95.63 கி.மீ-இல் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மாத்தூர் படுகை அணையை புனரமைத்தல், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே மைல் 53/3-4-இல் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஊத்துக்காடு நீரொழுங்கியை புனரமைத்தல், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம் கிராமம்,  பாலாறு குடியிருப்புக்கு அருகே பாலாற்றின் குறுக்கே 3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், ஆர்.கோம்பை கிராமம், தொப்பையசாமிமலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்தல் மற்றும் வழங்கு கால்வாய் மூலம் வடுகம்பாடி பெரியகுளம் மற்றும் இதர 9 எண்ணிக்கையிலான குளங்களுக்கு 5 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர் வழங்குதல், கோயம்புத்தூர்  மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம் க.ச.எண். 696-ல்  குமிட்டிபதி ஆற்றின் குறுக்கே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தடுப்பணை, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மதுக்கரை மார்க்கெட், ஏ.சி.சி. சிமெண்ட் தொழிற்சாலை பாலத்திற்கு அருகில் மஞ்சுபள்ளத்தின் குறுக்கே ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  தடுப்பணை என மொத்தம் 17 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (பொது) இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து