முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

புக்கரெஸ்ட் : பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரத்யேகமான ஷூவை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போது இருக்கும் ஒரே வழிமுறை சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஆனால், பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவி விடுகிறது.

இந்நிலையில், மக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் நீளமான ஷூக்களை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளர் கிரிகோர் லூப். டிரான்சில்வேனியாவின் க்ளூஜ் நகரைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளரான கிரிகோர் லூப், 39 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்.

தன் கண் எதிரே மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் செல்வதைப் பார்த்து இந்த ஷூவை தயாரித்திருப்பதாக இவர் கூறுகிறார்.  இந்த ஷூக்களை அணிந்த இரண்டு நபர்கள், நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்கும் என்கிறார்.

இவரது இந்த புதிய வடிவமைப்பை பார்த்து சில கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு ஜோடி ஷூவை தயாரிக்க இரண்டு நாட்கள் ஆவதாகவும், இதற்கு ஒரு சதுர மீட்டர் தோல் தேவைப்படும் என்று கூறும் அவர் ஒரு ஜோடி ஷூவின் விலை 115 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8650) என நிர்ணயம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து