முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரையை கடந்தது நிசர்கா புயல்: மும்பை விமான நிலையம் மூடல் : மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த நிலையில் மும்பை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது.

நேற்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் அலிபாக்கிலிருந்து ( மகாராஷ்டிரா) தெற்கு - தென்மேற்கு திசையில் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து (மகாராஷ்டிரா) தெற்கு - தென்மேற்கில் 170 கிலோமீட்டர் தொலைவிலும், சூரத்தில் இருந்து  (குஜராத்) தெற்கு - தென்மேற்கில் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. 

இது வடக்கு - வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, வடக்கு மகாராஷ்டிரா கடலோரம் அலிபாக்கின் தென்பகுதியில் (ராய்காட் மாவட்டம், மகாராஷ்டிரா) தீவிர சூறாவளிப் புயலாக நேற்று பிற்பகலில் கரையைக் கடக்க தொடங்கியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்த போது அதிகபட்சம், மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது.

மும்பைக்கு அருகே கரையை கடந்ததால் சேதம் ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. டாப்லர் வானிலை ரேடார்கள் மூலம் தொடர்ந்து மும்பை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து