முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில நேரங்களில் அமைதி கூட ஒரு வகையில் துரோகச் செயல்தான்- டென்னிஸ் வீராங்கனை ஒசாகா சொல்கிறார்

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

சில நேரங்களில் அமைதி கூட ஒருவகையில் துரோகச் செயல்தான் என்று டென்னிஸ் வீராங்கனை ஒசாகா கூறி உள்ளார்.

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர். ஜார்ஜ் பிளாயிட் தாக்குதலுக்கு பல்வேறு சரவதேச விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்னணி டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இவரது அம்மா ஜப்பான், அப்பா ஹெய்தியை (கருப்பர் இனம்) சேர்ந்தவர்கள். அவர் கூறியதாவது:-சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான். இதுபோன்ற செயல் நமக்கு நடக்கவில்லை என்பதால், மீண்டும் அப்படி நடக்காது என்று அர்த்தம் இல்லை. அமைதியாக இருக்க முடியாது. கடைகளை சூறையாடுகின்றனர் என்ற செய்தியை படிக்கும் முன், நிராயுதபாணியாக இருந்த கருப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை பாருங்கள், பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து