முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,256-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதார துறை கூறியுள்ளதாவது;

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 14,901 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 585 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்றுமேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 220-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1072 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 74 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 5,44,981 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.67 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,447 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1384 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,694 ஆண்கள், 10,278 பெண்கள், 14 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து