முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பா.ஜ.க. சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் என 5 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபையில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு தற்போது 103 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களான அக்சய் படேல், ஜிது சவுத்ரி இருவரும் புதன்கிழமை மாலையில் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அந்தக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் திரிவேதி அறிவித்தார். நேற்று மேலும் ஒரு  காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீரென ராஜினாமா செய்தார். மோர்பி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜேஷ் மெர்ஜா  தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 65 ஆகக் குறைந்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, அக்கட்சியின் பலம் குறைந்ததால் ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியை உடைக்கும் வேலையில் பா.ஜ.க. ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து