முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு : முதல்வர் எடப்பாடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பவானி சாகர் அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்  வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,   1.2.2020   முதல்     120   நாட்களுக்கு   7776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட  நான் ஆணையிட்டிருந்தேன்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து   விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள்   வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 முதல் 15.6.2020 முடிய 10 நாட்களில்  7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும்,  241.92 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட  நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில்  கோபி, பவானி மற்றும் அந்தியூர்                     வட்டடங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பதை  நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள்  நீரை சிக்கனமாக பயன்படுத்தி  உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து