முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் தொலைபேசியில் உரையாடினார். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டன என பதிவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து