முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மாட் பூர் வயது முதிர்வால் காலமானார் : இந்தியாவில் தெரு நாயிடம் கடி வாங்கியவர் !

சனிக்கிழமை, 13 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூசிலாந்து : இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்திருந்தபோது நாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்டுக் கொண்ட நியூஸிலாந்து முன்னாள் வீரர் மாட் பூர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த 1955-ம் ஆண்டு இந்தியாவுக்கு நியூஸிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட வந்திருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டி நடந்தது. அப்போது நியூஸிலாந்து அணியில் மாட் பூர் இடம் பெற்றிருந்தார். மாட் பூரே மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தார் அனைவருமே நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தக்கூடியவர்கள்.

பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நியூஸிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மைதானத்துக்குள் ஒரு தெருநாய் புகுந்தது. அந்த நாயைப் பார்த்த மாட் பூர், நாயின் மீதான பாசத்தால் அதை விரட்டிப் பிடிக்க ஓடினார். ஆனால், நாயோ தன்னை அடிக்க வருகிறார்கள் என நினைத்து ஓடியது. எப்படியோ நாயைக் காட்டிலும் வேகமாக ஓடி அதைப் பிடித்த மாட் பூரை நாய் கடித்து விட்டுத் தப்பி ஓடியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால், அதன்பின் அந்த நாயைக் கண்காணித்த போது, அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 12 தடுப்பூசிகள் வயிற்றில் போடப்பட்டன.  இந்த நிலையில் மாட் பூர் வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். ஆல் ரவுண்டரான மாட்பூரே கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை நியூஸிலாந்து அணியில் விளையாடியவர். நியூஸிலாந்து அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாட் பூரே 355 ரன்கள் சேர்த்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து