முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களின் கேட்ட பல்வேறு கேள்விக்கு துணை கேப்டன் ரோகிக் சர்மா பதில்

திங்கட்கிழமை, 15 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : நான் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:- 

கேள்வி: இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை அல்லது ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? 

பதில்: இரண்டுக்கும். 

கேள்வி: தற்போதைய காலக்கட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசிக்கிறீர்கள்? 

பதில்: ஜாசன் ராய் (இங்கிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) 

கேள்வி: ஊரடங்கு முடிந்ததும் அடுத்த கட்ட திட்டம் என்ன? 

பதில்: மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது தான். 

கேள்வி: டோனி குறித்து ஒரு வார்த்தை? 

பதில்: ஜாம்பவான் 

கேள்வி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஒரு வார்த்தை? 

பதில்  : இந்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ‘கோலி குறித்து ஒரு வார்த்தை’ என்ற கூறியபடி மூன்று விதமான பொம்மைகளை (ஈமோஜி) பதிவிட்டார். சிரித்தபடி காணப்பட்ட அந்த எமோஜிகளை பார்த்து அதற்குரிய வார்த்தையை கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார். 

கேள்வி: ஒரு நாள் கிரிக்கெட்டில் முச்சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் இதில் உங்களது விருப்பம்? 

பதில்: இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தான்

கேள்வி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து? 

பதில்: மிகச்சிறந்த அணி

கேள்வி: சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரில் உங்களது தேர்வு? 

பதில்: சிரித்தபடி நான் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து