முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு சமயத்தில் மூத்த வீரர்கள் எங்களை ஊக்கப்படுத்தினார்கள் : இளம் ஹாக்கி வீராங்கனை லால்ரெம்சியாமி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

தென்ஸ்வால்(மிசோரம்) : ஊரடங்கு சமயத்தில் மூத்த வீரர்கள் எங்களை ஊக்கப்படுத்தினார்கள் என்று லால்ரெம்சியாமி தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சுமார் இரண்டரை மாதங்கள் ஹாக்கி வீராங்கனைகள் பெங்களூருவிலேயே முடங்கினர். சமீபத்தில்தான் வீராங்கனைகள் அனைவரும் சொந்த ஊர் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.  இந்த நிலையில், ஊரடங்கின் போது பெங்களூருவில் கழித்த நாட்கள் பற்றி இளம் ஹாக்கி வீராங்கனை லால்ரெம்சியாமி கூறுகையில்,  

ஊரடங்கால் வெளியீல் சென்று பயிற்சி செய்ய முடியாது என்பதால் உடற்தகுதி பயிற்சி மட்டும் அறைகளில் செய்தோம். நீண்ட நாட்களாக ஒரே இடத்தில்  முடங்கியது கடினமாக இருந்தது. அந்த மூத்த வீரர்கள் ராணி (கேப்டன்) சவிதா ( துணை கேப்டன்) ஆகியோர் எங்களை போன்ற இளம் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தினர். அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து