முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2011 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா? -விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : கடந்த 2011-ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக இலங்கை அரசு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம், இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது, இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது.

ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது.  இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் சூதாட்டம் நடந்ததாகவும், அதில் இலங்கை விலை போய் விட்டதாகவும் அந்நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், மஹிந்தானந்தா அலுத்கமகே சமீபத்தில் பரபரப்பான தகவல்களை தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையில் விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து