முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு: ராணி 2-ம் எலிசபெத், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல் உயிரிழப்பும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்தை தாண்டியது. அதே போல் இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.  இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜட் டீரே கூறுகையில்,

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் அதிபர் டிரம்பும், ராணி 2-ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனா காலத்தில் இரு நாடுகளின் உறவும் முன்பைவிட வலுவாக இருப்பதை இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி செய்தனர் எனக் கூறினார். ராணி 2-ம் எலிசபெத் உடனான உரையாடலின் போது இங்கிலாந்திலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து