முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் புதிதாக 1,088 ஆம்புலன்ஸ்கள்: ஜெகன்மோகன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆந்திராவில் 1,088 புதிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 108 மற்றும் 104 எண்களின் சேவைகளுக்காக இந்த வாகனங்களை அம்மாநில முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பென்ஸ் கூட்டு ரோட்டில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.201 கோடியில் வாங்கப்பட்ட 1,088 ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் இலவச சேவைக்காக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ்களும், கிராமப்புறங்களில் மக்களின் இலவச மருத்துவ சேவைக்காக 104 எண் கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆந்திர முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குண்டூர் ஜி.ஜி.எச்.அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு வார்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, மருத்துவர்களின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்துள்ளதால், விலை மதிப்பில்லா ஏழைகளின் உயிர்களை காக்க இயலும். 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் சேவையும் பாராட்டுக்குரியது. ஆதலால் இவர்களின் மாத ஊதியமும் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து